Saturday 4th of May 2024 09:45:48 PM GMT

LANGUAGE - TAMIL
-
அணு ஆயுதக் குறைப்பு பேச்சிலிருந்து விலகும்  சீனாவின் முடிவு குறித்து ரஷ்யாவின் நிலை என்ன?!

அணு ஆயுதக் குறைப்பு பேச்சிலிருந்து விலகும் சீனாவின் முடிவு குறித்து ரஷ்யாவின் நிலை என்ன?!


அணு ஆயுதக் குறைப்பு தொடர்பில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தைகளில் சீனா இணைந்துகொள்ள மறுத்துள்ள நிலையில், இந்த விடயத்தில் பீஜிங்கின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்வதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.

ஆயுதக் கட்டுப்பாடுகள் தொடா்பில் முடிவெடுக்க ஒவ்வொரு நாடுகளின் அணுகுமுறைகளும் வேறுபடுகின்றன. இந்நிலையில் தங்களுக்கு அவசியமானதாகக் கருதும் நிலைப்பாட்டை எடுக்க சீனாவுக்கு உரிமை உண்டு என ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் அணு ஆயுத பரவல் மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குனர் விளாடிமிர் யெர்மகோவ் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

எந்தவொரு நாடும் தனது தேசிய நலன்களை முதலில் பாதுகாப்பது இயல்பானதே என யெர்மகோவை மேற்கோள் காட்டினார் RIA நோவோஸ்டி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அணு ஆயுதக் குறைப்பு தொடர்பான அமெரிக்க-ரஷ்யா பேச்சுவார்த்தைகளில் சீனா சேரும் என்று எதிர்பார்க்க முடியாது என சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் ஜெனரல் ஃபூ காங் நேற்று முன்தினம் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் மொஸ்கோவிடம் இருந்து இவ்வாறான பிரதிபலிப்பு வெளியாகியுள்ளது.

சீனா, அமெரிக்கா, ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை என் அழைக்கப்பட்ட பேச்சில் இணைய சீனா மறுப்பதால் சர்வதேச அணு ஆயுதக் குறைப்பு முயற்சிகளிலிருந்து சீனா விலகிச் செல்வதாக அர்த்தமல்ல எனவும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் ஜெனரல் ஃபூ காங் கூறியுள்ளாா்.

ஐக்கிய நாடுகள் சபையில் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் ஜெனீவாவில் ஆயுதக் குறைப்புக்கான மாநாட்டிற்கு சீனா ஒரு வலுவான பங்கை ஆற்றி வருகிறது என அவா் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE